நீண்டகால COVID என்றால் என்ன?
COVID-19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நோய்த்தொற்றைத் தொடர்ந்து "நீண்டகால COVID” அல்லது “COVID தொற்றுக்குப் பிந்தைய நோய்க்குறிகள்” என அழைக்கப்படும் தொடர்ச்சியான அறிகுறிகளையும், அதனால் ஏற்படும் நீண்ட கால விளைவுகளையும் கொண்டிருக்கக்கூடும். நீண்டகால COVID பற்றி அறியப்படாத விஷயங்கள் அதிகம் உள்ளது. நீண்டகால COVID பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருவதால், இதைப் பற்றி அதிகமாக நாங்கள் தொடர்ந்து அறிந்து கொள்கிறோம்.
நீண்டகால COVID அறிகுறிகள்
நீண்டகால COVID தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், நோய்த்தொற்றுக்குப் பிறகு பல வாரங்கள், மாதங்கள் அல்லது வருடங்கள் வரை நீடிக்கும் பல்வேறு விதமான அறிகுறிகளைக் கொண்டிருக்கலாம்.
இந்த அறிகுறிகள் மட்டுமன்றி, கீழ்கண்டவற்றையும் உள்ளடக்கியிருக்கலாம்:
- குறிப்பாக மன அல்லது உடல் ரீதியான உழைப்பிற்குப் பிறகு சோர்வாக உணருதல்
- காய்ச்சல்
- சுவாசிப்பதில் சிரமம்
- இருமல்
- நெஞ்சு வலி
- வாசனை மற்றும்/அல்லது சுவையில் ஏற்படும் மாற்றம்
- சிந்தனை அல்லது கவனம் செலுத்துவதில் சிரமம் அல்லது “மூளைச் செயல்பாட்டுக் குழப்பம்”
- தலைவலி
- வயிற்று வலி
- மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்கள்
யாரெல்லாம் நீண்டகால COVID தொற்றால் பாதிப்படையக்கூடும்?
COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட எவருக்கும் நீண்டகால COVID தோன்றலாம். தீவிரமான COVID-19 அறிகுறிகளால் பாதிக்கப்பட்டு, குறிப்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு இது தோன்றுகிறது. COVID-19 நோய்த்தொற்றின் போது அல்லது அதற்குப் பிறகு தோன்றும் மல்டிசிஸ்டம் இன்ஃப்ளமேட்டரி சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டவர்கள், நீண்டகால COVID தொற்றுக்கான அதிக அபாயத்தில் இருக்கலாம். பெண்கள், முதியவர்கள், உடல் நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், நீண்டகால COVID நோயால் அதிகம் பாதிப்படைவதற்கான வாய்ப்பு உள்ளது. பலமுறை COVID-19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நீண்டகால COVID உட்பட வேறு பல உடல்நல அபாயங்களைக் கொண்டிருக்கலாம்.
நீண்டகால COVID ஐத் தடுத்தல்
COVID-19 தொற்றைத் தடுப்பதே நீண்டகால COVID ஐத் தடுப்பதற்கான சிறந்த வழியாகும். உங்கள் கைகளை அடிக்கடி கழுவுதல், கூட்டத்தில் முகக்கவசங்களை அணிதல், நோய்வாய்ப்பட்டிருக்கும்போது வீட்டிலேயே இருத்தல் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகள், பூஸ்டர் டோஸ்களை செலுத்திக் கொள்வதன் மூலம் உங்களையும் மற்றவர்களையும் COVID-19 இலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
இன்னும் COVID-19 தடுப்பூசி செலுத்தாத நபர்களைக் காட்டிலும், தடுப்பூசி செலுத்தி கொண்ட நபர்களுக்கு நீண்டகால COVID ஆல் பாதிப்படையும் வாய்ப்புக் குறைவாக இருக்கலாம்.
COVID-19 நோய்க்கு தடுப்பூசி பெறுவது பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள்
நீண்டகால COVID நோயைக் கண்டறிதல்
நீண்டகால COVID நோயைக் கண்டறிவது கடினமாக இருக்கலாம். நோயாளிகளுக்கு அறிகுறிகளைப் பற்றி விளக்குவது சிரமமாக இருக்கலாம். நோயைக் கண்டறிவதற்கான ஆய்வக சோதனை அல்லது இமேஜிங் ஆய்வு எதுவும் இல்லை. ஒரு நோயாளி நீண்டகால COVID நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட, மருத்துவப் பரிசோதனைகள் எதிர்மறை முடிவுகளையே காட்டலாம்.
நோயின் ஆரம்ப கட்டத்திலே COVID-19 பரிசோதனை செய்துகொள்ளாமல், COVID-19 அறிகுறிகள் தென்படாமல், நீண்டகால COVID அறிகுறிகள் உள்ளது என்று தெரிவிப்பவர்கள். இதன்மூலம் இவர்களுக்கு COVID-19 இருப்பதை உறுதி செய்வது கடினமாகிறது மற்றும் இது நீண்டகால COVID நோயைக் கண்டறிவதைத் தடுக்கலாம் அல்லது தாமதப்படுத்தலாம். நோயின் ஆரம்ப கட்டத்திலே, உங்களது நீண்டகால COVID நோய் கண்டறிதலுக்கு உதவ நீங்கள் COVID-19 பரிசோதனை செய்துகொள்வது முக்கியம் ஆகும்.
நோயாளிகளுக்கான உதவிக்குறிப்புகள்: COVID தொற்றுக்குப் பிந்தைய உடல் நிலைகளுக்கான சுகாதாரப் பராமரிப்பு வழங்குநரின் முன்பதிவு சந்திப்புகள் (ஆங்கிலத்தில்)
புதிய மற்றும் ஏற்கனவே உள்ள உடல்நலப் பிரச்சனைகள்
COVID-19 தொற்று பல உறுப்பு அமைப்புகளைப் பாதித்து, சில நேரங்களில் தன்னெதிர்ப்பு நிலைகளைத் தூண்டுவதன் மூலம் நீண்டகால COVID தொற்றிற்கு பங்கு வகிக்கலாம். உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் உடலின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீக்கம் அல்லது திசு சேதத்தை ஏற்படுத்தும் போது தன்னெதிர்ப்பு நிலைகள் ஏற்படலாம். இதனால், COVID-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீரிழிவு அல்லது இதய நிலைகள் போன்ற புதிய உடல்நலப் பிரச்சனைகளை உருவாகும் வாய்ப்புகள் அதிகம். COVID-19 தொற்றுக்குப் பிறகு, நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற ஏற்கனவே உள்ள உடல்நலப் பிரச்சனைகள் மேலும் மோசமாகிவிடும்.
நீண்டகால COVID மற்றும் மாற்றுத்தினாளிகளுக்கான உரிமைகள்
நீண்டகால COVID உடல் மற்றும் மனநல குறைபாடுகளை ஏற்படுத்தலாம் மேலும் Americans with Disabilities Act (ADA, அமெரிக்க மாற்றுத்தினாளிகளுக்கான சட்டம்) இன் கீழ் இது இயலாமையாக கருதப்படுகிறது. நீண்டகால COVID நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மாற்றுத்தினாளி பாகுபடுத்தலிலிருந்து சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்படுகிறார்கள். நீண்டகால COVID தொடர்பான வறையரைகளுக்கு இணங்க, வணிகங்கள், மாகாணம் மற்றும் உள்ளூர் அரசாங்கங்களில் இருந்து தேவைப்படும் நியாயமான மாற்றங்களுக்கு அவர்கள் தகுதியுடையவர்களாக இருக்கலாம்.
ADA (ஆங்கிலத்தில்)இன் கீழ் மாற்றுத்திறனாளியாக வருபவர்களுக்கான “நீண்டகால COVID” பற்றிய வழிகாட்டுதல்
நீண்டகால COVID மற்றும் கர்ப்பகாலம்
கர்ப்பிணிகள் அல்லது சமீபத்தில் கர்ப்பமானவர்கள் COVID-19 நோயால் கடுமையாக நோய்வாய்ப்படுவதற்கான அதிக வாய்ப்பைக் கொண்டுள்ளனர். COVID-19 கர்ப்பத்தில் வளரும் குழந்தையைப் பாதிக்கக்கூடிய சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
நீண்டகால COVID எவ்வாறு கர்ப்பகாலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பற்றி அறியப்படாத விஷயங்கள் அதிகம் உள்ளது. National Institutes of Health (NIH, தேசிய சுகாதார நிறுவனங்கள்) (ஆங்கிலத்தில்) கர்ப்பகாலத்தின் போது, COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களது சந்ததியினருக்கு COVID-19 இன் மூலம் ஏற்படும் நீண்டகால விளைவுகள் குறித்து 4 வருட ஆய்வை மேற்கொள்ளும்.
நீண்டகால COVID மற்றும் இளைஞர்கள்
நீண்டகால COVID நோயால் இளைஞர்களும் நோய்வாய்ப்படலாம். நீண்டகால COVID அறிகுறிகளான சோர்வு மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமம் போன்றவற்றை எதிர்கொள்ளும் இளைஞர்கள் பள்ளி மற்றும் பிற செயல்பாடுகளில் பங்கேற்க சிரமப்படலாம். சிறு குழந்தைகளுக்கு தங்கள் அறிகுறிகளைப் பற்றிக் கூறுவதில் சிரமம் இருக்கலாம்.
2 ஃபெடரல் சட்டங்கள் இன்படி (ஆங்கிலத்தில்), நீண்டகால COVID நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிறப்புக் கல்வி, பாதுகாப்புகள் அல்லது இது தொடர்பான சேவைகளுக்குத் தகுதிபெறக்கூடும்.
COVID-19 தொற்றுக்கு எதிராக இளைஞர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது, அவர்களை நீண்டகால COVID தொற்றிலிருந்து தடுப்பதற்கான சிறந்த வழியாகும்.
இளைஞர்களுக்குத் தடுப்பூசி செலுத்துதல் பற்றி மேலும் அறிக.
மருத்துவர்களுக்கான தகவல்கள்
- நீண்டகால COVID தொற்றைப் பற்றிய ஆராய்ச்சியை எளிதாக்குவதற்காக, National Institutes of Health (NIH)ஆல் உருவாக்கப்பட்டநோயிலிருந்து மீண்டு வருதல்:நோயிலிருந்து மீண்டு வருதலை மேம்படுத்துவதற்கான கோவிட் ஆராய்ச்சி (ஆங்கிலத்தில்).
- COVID தொற்றுக்குப் பிந்தைய நிலைமைகள்: சுகாதார வழங்குநர்களுக்கான தகவல்கள் (ஆங்கிலத்தில்): Centers for Disease Control and Prevention (CDC, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்)ஆல் உருவாக்கப்பட்ட சுகாதார வழங்குநர்களுக்கான கண்ணோட்டம்.
- COVID தொற்றுக்குப் பிந்தைய நிலைமைகள்: CDC அறிவியல் (ஆங்கிலத்தில்) நீண்டகால COVID பற்றிய அறிவியல் சுருக்கம் மற்றும் COVID தோற்றுக்குப் பிந்தைய நிலைமைகள் குறித்த மருத்துவ வலைக் கருத்தரங்குகளுக்கான இணைப்புகள்.